பில்டப் கொடுக்கும் நடிகை ஆண்ட்ரியா!…

விளம்பரங்கள்

சென்னை:-கண்டநாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம் என்று தனது சினிமா கேரியரை தொடங்கிய நடிகை ஆண்ட்ரியாவுக்கு அவர் 14 வதாக நடித்த அரண்மனை படம்தான் முதன்முதலாக அவரது நடிப்புக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதுவரை தனது பர்பாமென்ஸ் பற்றி ஆண்ட்ரியாவே கேட்டால்தான், அவருக்காக நன்றாக நடித்திருக்கிறாய் என்று சொல்வார்களாம் சினிமா நண்பர்கள்.

ஆனால் அரண்மனை படத்தை பார்த்ததுமே அவர்களாக அவருக்கு போன் போட்டு நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார்களாம். அதனால் உச்சி குளிர்ந்து போயிருக்கும் ஆண்ட்ரியா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது பில்டப்களை ஆரம்பித்து விட்டார். அதாவது கமல் சாருடன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இருந்தே ஓரளவு நடிப்பின் ஆழத்தை தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது அதே கமலுடன் நடித்துள்ள விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறேன். அந்த படங்கள் ரிலீசாகும்போது ஆண்ட்ரியாவா இப்படி நடித்திருக்கிறார் என்று நீங்களெல்லாம் அசந்து போகப்போகிறீர்கள் என்று தனது பில்டப்பை கோடம்பாக்கத்தில் தொடங்கியிருக்கிறார் ஆண்ட்ரியா.

இதற்கிடையே, தரமணி படத்தில் நான் இசையமைத்து எழுதி, பாடி, நடித்துள்ள ஆங்கில பாடலை அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக வெளியிடும்போது எனது இசைமுகமும் வெளிச்சத்துக்கு வந்து விடும். அதனால் இனிமேல், நடிப்பு, இசை இரண்டிலுமே கைதேர்ந்த கலைஞராக திகழப்போகிறேன் என்றும் எக்கச்சக்க பில்டப்களை அள்ளிவிடுகிறாராம் ஆண்ட்ரியா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: