செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜய்யின் 58வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி வரும் சிம்புதேவன், தம்பி ராமையாவை இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

தம்பி ராமையா ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து ‘ஜில்லா’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்துக்காக 32 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுத்துள்ளார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி