செய்திகள்,திரையுலகம் பிந்து மாதவியை ஓரங்கட்டிய புதுமுக நடிகை!…

பிந்து மாதவியை ஓரங்கட்டிய புதுமுக நடிகை!…

பிந்து மாதவியை ஓரங்கட்டிய புதுமுக நடிகை!… post thumbnail image
சென்னை:-தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல் என இரண்டு ஹீரோக்கள் நடிக்க, பிந்து மாதவியும் நடிக்கிறார். ஆனால், இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற பெயரில் ஒரு கொல்கத்தா நடிகையும் அறிமுகமாகிறார். கதைப்படி இவருக்குத்தான் முதன்மை நாயகி வேடமாம்.அதோடு தற்போது மார்க்கெட் இருக்கிற அட்டகத்தி தினேசுக்கு இவர்தான் ஜோடியாம்.

அதனால், நகுலுககு ஜோடியாக நடிக்கும் பிந்து மாதவி தன்னை செகண்ட் ஹீரோயினாக்கி விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஆனால், இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலுமே கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் பிந்து மாதவிக்கு இந்த படத்தில் அதைவிட பெரிய ரோல்தான் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

கொல்கத்தாவில் இருந்து வந்த புதுமுக நடிகையான ஐஸ்வர்யா தத்தா ஒரு படத்தோடு தன்னை செகண்ட் கிரேடு நடிகையாக்கி விட்டதால் அவரை போட்டி மனப்பான்மையுடன் பார்க்கத் தொடங்கியிருக்கும் பிந்துமாதவி, ஸ்பாட்டில் அவர் தன்னைப்பார்த்தாலே முகத்தை வேறு பக்கமாக வெடுக்கென்று திருப்பிக் கொள்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி