மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நடிகை லட்சுமிமேனன்!…

விளம்பரங்கள்

சென்னை:-9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் கதாநாயகியாகி விட்டவர் லட்சுமிமேனன். அம்மா ஆசிரியை என்பதால் இவர் நினைத்த போதெல்லாம் லீவ் கொடுப்பதற்கு பள்ளி நிர்வாகமும் சம்மதித்தது. சின்ன பெண்ணாக இருந்தபோதும் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி சித்தார்த், விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் லட்சுமிமேனன். ஆனபோதும், மஞ்சப்பை, ஜிகர்தண்டா படங்களுக்குப்பிறகு கார்த்தியுடன் கொம்பன் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

அதையடுத்து, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷாலுடன் சுசீந்திரன் இயக்கும் படத்தில் லட்சுமிமேனன் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக படு பிசியாக இருந்து வந்த லட்சுமிமேனன், இப்போது ப்ரியாகி விட்டார்.

அதனால் மீண்டும் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருக்கிறாராம். படிப்பு ஒருபக்கம் இருந்தாலும், தான் தோழிகளுடன் விளையாட வேண்டிய காலகட்டத்தை சினிமாவில் செலவழித்து விட்டதால், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் பள்ளி க்ரவுண்டில் ஹாயாக விளையாடி என்சாய் பண்ணி வருகிறாராம் லட்சுமிமேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: