செய்திகள்,திரையுலகம் டாப் 10 வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!…

டாப் 10 வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!…

டாப் 10 வரிசையில் நம்பர் ஒன்னாக இருக்கும் மஸ்காரா பாட்டு!… post thumbnail image
சென்னை:-தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் பிரியன். அதில், விஜய் ஆண்டனி ஹீரோவாக முதன்முதலாக நடித்த நான் படத்தில் பிரியன் எழுதிய மக்கா ஏல மக்கா ஏல -என்ற பாடல் அந்த படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட்டானது.

ஏ.பி.சி என அனைத்து ஏரியா ரசிகர்களையும் மெய்மறந்து ஆட வைத்து அந்த பாடல் அப்போது சேனல்கள், வானொலி என அனைத்து ஊடகங்களிலும் டாப் 10 பாடல்கள் வரிசையில் நம்பர்-ஒன்னாக சில மாதங்களாக இருந்தது.அதேபோல், இப்போது அதே விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்துள்ள சலீம் படத்திலும் மக்கா ஏல மக்கா ஏல பாணியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்று இடம்பெற்றிருக்கும் பாடலும் இப்போது சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த பாடலும் டாப்-10 பாடல் வரிசையில் கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி