நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…

விளம்பரங்கள்

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது பற்றிய தீர்ப்பை நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா அறிவித்ததும், அது குறித்து பெங்களூர் தனி கோர்ட்டில் ஜெயலலிதா கூறியதாவது:–

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, அந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றவர்.
எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: