ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் நடிகை எமியும் சேர்ந்தார்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் ஆர்யாவுக்கு நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள். இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ் நாட்டில் நண்பர்கள் இல்லை. இங்கு நடிக்க மட்டுமே வருவதால் நடித்து முடித்த உடன் லண்டன் சென்று விடுகிறேன். அங்குதான் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு ஆர்யா மட்டுமே நண்பர். மதராசபட்டினம் படத்தில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுபற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதில்லை என்கிறார் எமி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: