அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!…

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!…

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பத்திரிகைகள் புகழாரம் சூட்டி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி யுஎஸ்ஏ டுடே போன்ற பிரபல, செல்வாக்குள்ள பத்திரிகைகள் இந்த புகழாரத்தை சூட்டி உள்ளன.அப்பத்திரிகைகள் கூறி இருப்பதாவது:-

நரேந்திர மோடி, மாபெரும் பிரபல ஹீரோவாக நியூயார்க் நகருக்கு வந்தார். அவர் அதிகரித்து வரும் சீனாவின் பலத்தை சமாளிக்கக் கூடியவராக கருதப்படுகிறார். அவர் மாடிசன் சதுக்கத்தில் அமெரிக்க இந்தியர்களிடையே பேசுகையில், இந்தியாவை தூய்மைப்படுத்தி அதை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் விருப்பத்தை தெரிவித்தார்.ஒபாமாவை சந்திக்கும் அவர், ‘ராக் ஸ்டார்’ அந்தஸ்தை அடைந்துள்ளார்.
இவ்வாறு அவை கூறியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி