செய்திகள்,திரையுலகம் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!… post thumbnail image
சென்னை:-ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ஒரு நல்ல கேரக்டர் இருந்தாலும் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில், ரம்மியில் செகண்ட் ஹீரோவாக நடித்த அவர், ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடியிருக்கிறார்.

இந்நிலையில், பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த விஜயசேதுபதி, அடுத்து 3 ஜி என்றொரு படத்தில் ஒரேயொரு காட்சியில் நடிக்கிறாராம். கதைப்படி படத்தின் கடைசி காட்சியில்தான் அவர் நடிக்கும் காட்சி வருகிறதாம். ஆனபோதும், அந்த காட்சியைத்தான் முதல் நாளில் முதல் காட்சியாக படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி