அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…

குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…

குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!… post thumbnail image
வாஷிங்டன்:-5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.தனி விமானம் மூலம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வரவேற்றார்.

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான ‘பிளையர் ஹவுஸ்’ நோக்கி வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குழுவுடன் காரில் சென்ற மோடியை சாலையோரங்களில் கூடி நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கையை அசைத்து, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.பின்னர், வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை, வாசல் கதவருகே காத்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, குஜராத்தி மொழியில் ’கேம் சோ’ (எப்படி இருக்கிறீர்கள்?) திரு. பிரதமர் அவர்களே..! என்று அன்புடன் வரவேற்றார்.

’நன்றாக இருக்கிறேன்’ என்று சிரித்தபடியே கூறி அவருடன் கைகுலுக்கிய மோடி, பகவத் கீதையை ஒபாமாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அவர் மோடி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகளை விருந்து அறைக்கு அழைத்துச் சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி