400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி!…

விளம்பரங்கள்

மாட்ரிட்:-ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார். இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: