செய்திகள்,திரையுலகம் 100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!… post thumbnail image
சென்னை:-‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும் படம் இது.

தற்போது பாகுபலி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைக்கின்றன.பாகுபலி படத்திற்காக கலை இயக்குநர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். சாபு சிரில் குழுவினர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 50 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி உதவி செய்தது ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.

சிலையை செய்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைவிட மிகப்பெரிய சவால் ஒன்றும் இருக்கிறது என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. என்ன சவால்… அந்த சிலையை நேராக நிமிர்த்தி, குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துவது அந்த சவால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி