செய்திகள்,திரையுலகம் பூஜை படத்தின் பாடல்கள் தலைப்பு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

பூஜை படத்தின் பாடல்கள் தலைப்பு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

பூஜை படத்தின் பாடல்கள் தலைப்பு இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!… post thumbnail image
சென்னை:-விஷால்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் பாடல் வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் தலைப்பு திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஓடி ஓடி’ என்று தொடங்கும் பாடலை பாலக்காடு ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘இப்படியே’ என்று தொடங்கும் பாடலை ராகுல் நம்பியாரும், மிலி நாயரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ‘வேறாரும்’ என்ற பாடலை கார்த்திக், பூஜா ஆகியோரும், ‘உயிரே’ என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவும், ‘சோடா பாட்டில்’ என்று தொடங்கும் பாடலை யாஷின், அந்தோணி தாசன், சத்யன் ஆகியோரும், ‘தேவதை’ என்று தொடங்கும் பாடலை நிவஸ் ஆகியோரும் பாடியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பாடல்கள் வெளியிடப்படாத சூழ்நிலையில் பாடல்களின் தலைப்பு திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி