செய்திகள்,திரையுலகம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…

நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…

நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?… post thumbnail image
மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பேங் பேங்’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் ஹிருத்திக் உடன் கத்ரீனா கைப் நடித்துள்ளார். இந்நிலையில், அனுபமா சோப்ராவுடனான பேட்டியின் போது ஹிருத்திக் ரோஷன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரசிகர்கள் தன்னை எப்போது ஒரு ஸ்டாராக அங்கீகரித்தார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.

அதில், அவர் ஹீரோவாக அறிமுகமான ஹகோ நா பியார் ஹை படம் ரிலீஸான சமயத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார் ஹிருத்திக். அப்போது அவருக்கு சக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். படம் முடிந்து ஹிருத்திக் தனது நண்பர்களுடன் வெளியே வந்தபோது ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்களாம், இதை ஹிருத்திக் நினைவுகூர்ந்தார்.

மேலும் ஹிருத்திக்கின் எந்த படங்களை ரசிகர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹிருத்திக், லக்ஷ்யா, குஷாரீஸ், கோய் மில் கயா, தூம்-2 போன்ற படங்களை ரசிகர்கள் பெரிதும் விரும்பினார்கள். மேலும் இந்தப்படங்கள் தான் என்னை ஒரு உயரிய அந்தஸ்த்திற்கும் உயர்த்தின என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி