செய்திகள்,திரையுலகம் தலக்கோணம் (2014) திரை விமர்சனம்…

தலக்கோணம் (2014) திரை விமர்சனம்…

தலக்கோணம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் ஜித்தேசும், நாயகி ரியாவும் வெவ்வேறு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ரியாவின் தந்தையான கோட்டா சீனிவாசராவ் மந்திரி பதவியில் இருந்து வருகிறார். போலீஸ் அதிகாரியான பெரோஸ்கான் அவருடைய தலைமையில் காட்டுக்குள் இருக்கும் தீவிரவாதியான ஜிந்தாவை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். பிடிக்க சென்ற இடத்தில் ஜிந்தாவின் தம்பியை பிடித்து வந்துவிடுகிறார்.இதற்கிடையில் வெவ்வேறு கல்லூரியில் படிக்கும் ஜித்தேசும், ரியாவும் காட்டுப் பகுதிக்கு என்.எஸ்.எஸ். கேம்ப்புக்கு செல்கிறார்கள். ரியா மந்திரி மகள் என்பதை அறிந்துக் கொண்ட ஜிந்தா, ஜித்தேசையும் ரியாவையும் கடத்தி செல்கிறார். இவர்களை பணய கைதியாக வைத்துக் கொண்டு ஜிந்தா, தன் தம்பியை விடுவிக்க கோரிக்கை வைக்கின்றான்.

ஆனால் பெரோஸ்கான், ஜிந்தாவின் தம்பிக்கு குண்டடி பட்டிருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆதலால் அவனது தம்பியை விடுவிக்க 20 நாட்கள் அவகாசம் கேட்கிறார் பெரோஸ்கான். இதை ஜிந்தா ஏற்றுக் கொள்கிறான். இதற்கிடையில் ஜிந்தாவை பிடிக்க காட்டுக்கு செல்கிறார் பெரோஸ்கான். இந்நிலையில் காட்டுக்குள் பணயக் கைதிகளாக இருக்கும் ஜித்தேசுக்கும், ரியாவிற்கும் காதல் ஏற்பட்டு விடுகிறது.ஒரு கட்டத்தில் இவர்கள் தீவிரவாதி ஜிந்தாவிடம் இருந்து தப்பித்து சென்றுவிடுகிறார்கள். இதற்கிடையில் மந்திரியான கோட்டா சீனிவாசராவ் சில காரணங்களால் தன் மகளான ரியாவை கொல்ல திட்டமிடுகிறார். இதற்காக தனி படையை காட்டுக்குள் அனுப்புகிறார்.இறுதியில் கோட்டா சீனிவாசராவ்வின் திட்டத்தில் ரியா பலியானாரா? ஜித்தேசும், ரியாவும் ஒன்று சேர்ந்தார்களா? பெரோஸ்கான் ஜிந்தாவை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜித்தேஸ், காதல், நடனம், சண்டை என அனைத்து வித்தைகளையும் இறக்கிவிட முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சரியாக டியூனாகாததால் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். நாயகி ரியா திறமையாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து ரசிகர்கள் மனதில் நிற்க முயற்சி செய்திருக்கிறார்.

மந்திரியாக கோட்டா சீனிவாசராவ், பெரோஸ்கான், ஜிந்தா ஆகியோர் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.சுபாஷ், ஜவஹார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராமலிங்கம் ஒளிப்பதிவில் காட்டுப்பகுதியை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் கே.பத்மராஜ் திரைக்கதையில் நிறைய டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வைத்து சொதப்பியிருக்கிறார். படத்தின் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளை அமைத்து பார்ப்பவர்களை சலிப்பை ஏற்படுத்துகிறார்.

மொத்தத்தில் ‘தலக்கோணம்’ அதிரடி………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி