செய்திகள்,திரையுலகம் சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி’.இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார். விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

கிட்டதட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராகவிருக்கிறதாம். இந்த படத்திற்காக மட்டுமே மொத்தமாக 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் விஜய். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி