பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘ப்ரியம்’, ‘லவ் டுடே’, ‘ஒன்பதுல குரு’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், மந்த்ரா. இப்போது ‘வாலு’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘ராசி’ என்ற பெயரில் நடித்து வரும் அவர், சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஐதராபாத்தில் குடியேறியுள்ளார்.

இப்போது 10 வருட இடைவெளிக்குப் பிறகு மந்த்ரா அம்மா ஆகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளியன்று எனக்கு பெண் குழந்தை பிறந்தது. என் கணவரின் விருப்பமும் அதுதான். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: