நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…

விளம்பரங்கள்

சென்னை:-பிரபல மலையாள நடிகர்களில் திலீப்பும் ஒருவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் திலீப். இவரது மார்க்கெட் தற்போது பரபரப்பாக இல்லை. அதனால் கோலிவுட்டில் பேசப்படும் திறமையான நடிகைகளை தான் நடிக்கும் மலையாளப் படங்களில் நடிக்க வைத்து பரபரப்பு தேடி வருகிறார்.

முதலில் ஒரு மலையாள படத்துக்காக அமலாபாலை கொண்டு சென்ற தீலிப், சமீபத்தில் அவதாரம் என்ற படத்துக்காக கும்கி லட்சுமிமேனனை கொண்டு சென்றார். அமலாபாலுடன் நடித்த படம் வெற்றி பெற்றபோதும், லட்சுமிமேனனுடன் நடித்த படம் ஓடவில்லை. இருப்பினும் திலீப்பின் கோலிவுட் மோகம் குறைந்தபாடில்லை.அதனால் தற்போது அந்த இரண்டு நடிகைகளையும் விட ஒரு மெகா நடிகையை தனக்கு ஜோடி சேர்த்து விட வேண்டும் என்று நினைத்த திலீப், தற்போது ஜோஷி இயக்கத்தில் தான் நடிக்கும் சத்தம் சிவன் என்ற படத்துக்காக ஹன்சிகாவை இழுத்திருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி தமிழ், தெலுங்கில் ஹன்சிகாவின் மார்க்கெட் பிசியாக இருந்தபோதும், சில மலையாளப்படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த அவருக்கும் மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வந்ததாம். அதனால்தான் திலீப் அழைப்பு விடுத்ததும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: