செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…

ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…

ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!… post thumbnail image
கொல்கத்தா:-2014ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.இதுபற்றி உலக தங்க கவுன்சிலின் இந்திய இயக்குநர் விர்பின் ஷர்மா கூறுகையில், ‘இந்த ஆண்டின் முதல் பாதி தங்கத்திற்கு சற்று சவாலாக அமைந்துவிட்டது. நகைக்கான தேவை கடந்த ஆண்டை விட தற்போது 14 சதவீதம் குறைந்தே இருக்கிறது.

எனினும், அது தற்காலிகமானதுதான். நீண்ட கால அடிப்படையில் தங்கத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அது தவிர பண்டிகை காலங்களும் நெருங்கி வருகின்றன. அப்படி பார்க்கும்போது 850 டன் முதல் 950 டன் வரை தங்கத்திற்கு தேவை அதிகரிக்கலாம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி