அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…

லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…

லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!… post thumbnail image
நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக்கின் சுமார் பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை தொடர்பாக சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யி-யுடன் பேசியது என்ன… என்பது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் விவரித்த சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-

சீன அதிபரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய வருகை, நல்ல பலனையளித்திருந்த நிலையில், அவரது பயணத்தின்போது எல்லையில் நிகழ்ந்த சம்பவமானது, அந்தப் பலனின் மீது ஒரு நிழலைப் படியச் செய்துவிட்டது.இந்தியா-சீனா இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் எல்லையில் நிலவிவந்த பதற்றநிலை தீர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லைப்பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து தொடங்கி, வரும் 30ம் தேதிக்குள் எல்லையை கடந்து முன்னேறிய இருந்து இரு நாட்டுப் படைகளும் லடாக் பகுதியில் இருந்து திரும்பப்பெறப்படும். செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தன்வோ.. அதே நிலையில் இரு நாட்டு படைகளும் நிலை நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி