செய்திகள்,திரையுலகம் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் நடிக்க ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சம்மதித்து உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் மகேஷ்பாபுவின் உறவினருமான சூரிய நாராயாணராவ் இரண்டு கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கிறார். இப்படத்துக்கு மகேஷ்பாபு ஏற்கனவே தேர்வாகியுள்ளார். அவருடன் இன்னொரு நாயகனாக ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

லிங்கா, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு நேரில் சென்று ரஜினியை சந்தித்து இது குறித்து பேசினார். ரஜினியும் இப்படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார். இதனை சூரியநாராயணராவே தெரிவித்தார். லிங்கா படத்தில் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தை முடித்து விட்டு மகேஷ்பாபு படத்துக்கு செல்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி