அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

தூய்மை இந்தியா திட்டத்தை 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!… post thumbnail image
புதுடெல்லி:-அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் விதமாக, ‘தூய்மை இந்தியா’ என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்றுகையில் இதனை அவர் வெளியிட்டார்.அவர் கூறுகையில், நான் ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வந்தேன். வறுமையை நான் உணர்ந்து இருக்கிறேன். ஏழைகள் எப்போதும் சுயமரியாதையுடன் இருப்பார்கள். அது தூய்மையின் தொடக்கமாக இருக்கும். இதனால் நான் ‘தூய்மை இந்தியா’ என்ற பிரசார இயக்கத்தை தொடங்குகிறேன். இந்த இயக்கம் வருகிற 2ம் தேதி ஆரம்பிக்கும். வருகிற 4 ஆண்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றார். இந்த அறிவிப்பின்படி, 2ம் தேதி, பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக மத்திய மந்திரிசபை செயலாளர் அஜித் செத், அனைத்து மத்திய அரசுத்துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகம் வந்து உறுதிமொழி ஏற்க வேண்டும். பிரதமர் அறிவித்தபடி ‘தூய்மை இந்தியா’ இயக்கப் பணிகளை அன்று முதல் தொடங்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இதில் பங்கேற்று பொது நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். முதல் ஒரு வார காலத்தில், அரசு அலுவலக அறைகளிலும் மற்றும் வளாகத்தில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் வேண்டாத பொருட்கள் அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பணிபுரியும் இடங்கள், தெருக்கள் மற்றும் சாலைகள், மார்க்கெட்டுகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம், சிலை அமைந்துள்ள இடங்கள், நினைவிடம், ஆறு, ஏரி, குட்டை மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடத்திலும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஊழியர்களை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி