செய்திகள்,திரையுலகம் சீதா வேடத்தில் நடிகை மது ஷாலினி!…

சீதா வேடத்தில் நடிகை மது ஷாலினி!…

சீதா வேடத்தில் நடிகை மது ஷாலினி!… post thumbnail image
சென்னை:-வேணு என்ற இயக்குனரின் இயக்கத்தில் ‘சீதாவலோகனம்’ என்ற பெயரில் ராமாயணம் சார்ந்த ஒரு சரித்திரப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சீதா கதாபாத்தில் நடிகை மது ஷாலினி நடித்து வருகிறார்.தமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் இந்த மது ஷாலினி. அதன் பின் இங்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அவருக்கு அமையவில்லை.

தெலுங்கில் சில படங்களிலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்தார். தற்போது ‘சீதாவலோகனம்’ படத்தை மது ஷாலினி மிகவும் எதிர்பார்க்கிறாராம். சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள மது ஷாலினியை பலரும் பாராட்டி வருகிறார்களாம். இதற்கு முன் சில பல படங்களில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் மது ஷாலினி நடித்தவர்தான் என்றாலும் இந்தப் படத்தில் அவருடைய தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி