ஷங்கர் என்னை கண்டிக்கவில்லை – எமி ஜாக்சன்!…

விளம்பரங்கள்

சென்னை:-மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் ஐ படப்பிடிப்பில் இருந்தபோது தனது காதலரை சந்திக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி லண்டனுக்கு ஓட்டம் பிடித்ததாக அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது செய்திகள் வெளியானது. அதோடு, அடிக்கடி இரவு பார்ட்டிகளுக்கு சென்று வந்த எமி, மறுநாள் படப்பிடிப்பு தளங்களுக்கு காலதாமதமாக வந்ததாக இன்னொரு பரபரப்பு செய்தியும் வெளியானது.இதனால் டைரக்டர் ஷங்கர் கூட எமியிடம் கோபித்துக் கொண்டதோடு, நிறைய கண்டிசன்களை போட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அதுபற்றி எமி ஜாக்சனிடம் கேட்டால், என்னிடம் யாரும் எந்த கண்டிசனும் போடவில்லை என்கிறார். என்னைப் பொறுத்தவரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் 5 நிமிடம் 10 நிமிடம் வேண்டுமானால் முன்ன பின்ன இருக்கலாம். மற்றபடி சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவேன்.
அதோடு, என் பாய் ப்ரண்டுடன் நான் பழகுவது எனது தனிப்பட்ட விசயம். அதில் அவர் ஒருபோதும் தலையிட்டது இல்லை. அப்படியே தலையிட்டாலும் நானும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் எமி ஜாக்சன், டைரக்டர் ஷங்கர் எனது வளர்ச்சியில் நிறைய அக்கறை கொண்டவர். அதனால், ஐ படப்பிடிப்பில் இருந்தபோது என்னை தமிழ் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அதன்பிறகுதான் தமிழ் கற்றுக்கொண்டால் நடிப்பதற்கு இன்னும் எளிதாக இருக்குமே என்பதற்காக நானும் யூனிட் நபர்களுடன் எனக்கு தெரிந்த ஓரிரு தமிழ் வார்த்தைகளை பேசத் தொடங்கினேன். இப்போது நான் ஓரளவு தமிழ் பேசுகிறேன் என்றால் அதற்கு முழுக்காரணம் டைரக்டர் ஷங்கர்தான் என்கிறார் எமி ஜாக்சன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: