‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்தது – டிசம்பர் 12ல் படம் ரிலீஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கோச்சடையான்’ படம் ரிலீசானதும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்க துவங்கினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தினர். பிறகு ஐதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடந்தது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினர். படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு மேல் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

துணை நடிகர், நடிகைகள் ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டு இக்காட்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது வசன பகுதி படப்பிடிப்பு முழுவதும் முழுமை அடைந்து விட்டது.ரஜினியும் படக்குழுவினரும் சென்னை திரும்பி விட்டனர். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ‘லிங்கா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: