செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டம் வெற்றி பெற்றிருப்பதற்காக இந்தியாவையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பையும் அமெரிக்க தூதரகம் பாராட்டுகிறது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் ‘மங்கள்யான்’ நுழைந்து சாதனை படைத்திருப்பதின் மூலம், விண்வெளி துறையில் சாதனை படைத்துள்ள உயர்வரிசை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
‘மாவன்’ விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி அமைப்பின் விஞ்ஞானிகள் குழு, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

மற்றொரு வல்லரசு நாடான சீனாவும் ‘மங்கள்யான்’ திட்ட வெற்றிக்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.இதுபற்றி சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்திருக்கும் இவ்வேளையில் இந்தியாவை பாராட்டுகிறோம். இது இந்தியாவுக்கு பெருமை. ஆசியாவுக்கு பெருமை. விண்வெளியில் மனித குல ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் முன்னேற்றம். எனவே, இதற்காக இந்தியாவை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி