செய்திகள்,திரையுலகம் அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…

அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…

அனிருத்தை கிண்டல் செய்த  பாடகி சின்மயி!… post thumbnail image
சென்னை:-அனிருத் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத்.

அந்தளவுக்கு தமிழ்த்திரை உலகில் முக்கியமானவராக விளங்கும் அனிருத்தை அழைத்து ஐ படத்தில் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஐ படத்தில் இடம்பெற்ற பாடல்களை, அதே பாடகர்களை வைத்து ஐ இசைவெளியீட்டு விழாவில் பாட வைத்தார்கள். அப்படி பாடுவதற்காக அனிருத்தை மேடைக்கு அழைத்தபோது, அர்னால்டை விட பெரிய பாடி பில்டர் நம்ம ஊரில் இருக்கிறார். இப்போது அவரை அழைக்கப்போகிறேன் – என்று கிண்டலாக சொல்லிவிட்டு அனிருத்தை அழைத்தார் சின்மயி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி