வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதி!…

விளம்பரங்கள்

இன்சியான:-ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை ஆண்கள் காம் பவுண்ட் அணிகள் பிரிவில் ரஜத் சவுகான், சந்தீப்குமார், அபிசேக் வர்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி அரை இறுதியில் ஈரானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 231–227 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது.

முன்னதாக இந்திய அணி கால் இறுதியில் 234–229 என்ற கணக்கில் மலேசியாவையும், அதற்கு முந்தைய சுற்றில் 233–218 என்ற கணக்கில் கத்தாரையும் தோற்கடித்து இருந்தது. இந்திய பெண்கள் அணி அரை இறுதியில் 224–226 என்ற கணக்கில் மயிரிழையில் சீனதைபேயிடம் தோற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: