மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இன்று டெல்லி சென்று, மங்கள்யான் அனுப்பிய புகைப்படங்களை வழங்கினர். இத்தகவலை பிரதமர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக, செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை இஸ்ரோ தனது டுவிட்டர் தளத்தில் போஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: