செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 33 கோடி!…

‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 33 கோடி!…

‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 33 கோடி!… post thumbnail image
சென்னை:-சில வாரங்களுக்கு முன்பாகவே ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடி வரை விலை பேசப்படுவதாகத் தகவல் வெளியானது. இசை வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற வர்த்தகப் பேச்சில் அந்த உரிமை சுமார் 33 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை வாங்க தெலுங்குத் தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியதாம்.

கடைசியாக மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் திருப்பதி பிரசாத் ஆகியோர் இணைந்து ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலக வரலாற்றில் இதுவரை எந்த ஒரு டப்பிங் படமும் இந்த அளவிற்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி