செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…

ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…

ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!… post thumbnail image
இன்சியோன்:-ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் ஓமனை சந்தித்தது. இந்திய அணியில் ரகுநாத் 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான ஓமனை விழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

இந்திய அணியில் ரூபிந்தர்பால்சிங் (18-வது, 19-வது நிமிடம்) 2 கோலும், ரகுநாத் (39-வது, 60-வது நிமிடம்) 2கோலும், அக்ஷ்தீப்சிங் (33-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (54-வது நிமிடம்), முஜ்தபா (60-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி, முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்று இருந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய வீரர் ருபிந்தர்பால்சிங் காயம் அடைந்து இருப்பது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி