மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்!…

விளம்பரங்கள்

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் தொடக்கத்தில் மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தது போலவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வந்தார். சென்னை ஈசிஆர் சாலையில் பெரும்பாலும் இரவு நேரங்களாக அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அவருடன் சில நாட்களில் அனுஷ்காவும் பங்கேற்றார்.

சில மாத இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த அப்படப்பிடிப்பில் இளமையான கெட்டப்பில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து விடுபட்டு, யூத்தாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார் அஜீத். அப்போது அவருடன் திரிஷா நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.

அவுட்டோர் படப்பிடிப்புகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி விட்ட கெளதம்மேனன், மீண்டும் புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப் போகிறாராம். அதனால் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாறியுள்ளார் அஜீத். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: