செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…

ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…

ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!… post thumbnail image
இஞ்சியோன்:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிருக்கான ஊஷூ போட்டியில் (சாண்டா 52 கிலோ எடைப்பிரிவு) இந்தியாவின் யம்னம் சனதோய் தேவி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஜாங் லுவானை சனதோய் தேவி எதிர்கொண்டார். கடுமையாகப் போராடிய சனதோய் தேவி தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி