நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…

விளம்பரங்கள்

சென்னை:-லிங்கா, அஜித் படம், பாகுபலி, ருத்ரமா தேவி என தென்னிந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை அனுஷ்காதான்.தமிழில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் ஜோடி, தெலுங்கில் அவரை மையப்படுத்திய பிரம்மாண்ட சரித்திரப் படங்கள் என அடுத்த ஆண்டு வரை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அனுஷ்கா பற்றிய செய்திகள்தான் தினம் தினம் வந்து கொண்டிருக்கும். ஆனால், அதைப் பற்றி பொறாமைப்பட்ட சிலர் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கின்றனர்.

இது கடந்த சில நாட்களாக தெலுங்குத் திரையுலகில் அதிகமாகப் பேசப்பட்டு வந்தது.ஆனால், அதில் எந்த அளவும் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என அனுஷ்காவின் மேலாளர் தெரிவித்துள்ளாராம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து பல படங்களில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வருகிறதாம். அவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதில் அனுஷ்கா கவனமாக இருந்து வருகிறார், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

30 வயதைக் கடந்தாலும் அனுஷ்காவின் தோற்றமும், பொலிவும் அப்படியே இருப்பதே இப்படிப்பட்ட வதந்திகளை சிலர் பரப்பி விடுவதற்குக் காரணம் என அனுஷ்காவின் அபிமானிகள் தெரிவிக்கின்றனர். அனுஷ்கா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளன. விரைவில் அனுஷ்கா அவருடைய அடுத்த படங்களைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: