‘ஐ’ தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் ஜாக்கிசான், சிரஞ்சீவி!…

விளம்பரங்கள்

சென்னை:-தெலுங்கு ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு ஜாக்கி சான் வந்து கலந்து கொள்வார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடந்த ‘ஐ’ இசை விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதே போன்று ‘மனோகரடு’ இசை வெளியீட்டு விழாவில் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி கலந்து கொள்ள இருக்கிறாராம்.

அவரோடு வேறு முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில், சென்னையில் நடைபெற்ற ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தைத் தவிர வேறு எந்த முன்னணி தமிழ் நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தெலுங்கில் அப்படி இல்லாமல் வேறு சில முன்னணி நட்சத்திரங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசை விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: