செய்திகள்,திரையுலகம் தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு!…

தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு!…

தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-கடந்த வருடம் திடீரென சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிம்புவும், தனுஷும் கைகோர்த்தபடி சினிமா விழாக்களிலும் பார்ட்டிகளிலும் தென்பட்டனர்.
போதாக்குறைக்கு இருவரும் செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டு வந்தனர்.

சிம்பு உடனான நட்பை ரஜினி குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், அதையும் மீறி என்ன காரணத்தினாலோ சிம்பு உடன் அதீத நெருக்கத்தை காட்டுகிறார் தனுஷ் என்று திரைப்படத்துறையில் கிசுகிசு எழுந்தது. அது மட்டுமல்ல, இந்த பிரச்சனை காரணமாகவே தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் மன வருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலேஷியாவில் ஒரு விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவுக்கு தனுஷ் செல்லாததினால், அவருக்கு பதில் சிம்பு பெற்றுக் கொண்டார். இந்த விஷயம் தனுஷுக்கு சொல்லப்பட்டதும் சிம்புவுக்கு போனிலேயே நன்றி சொன்னாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி