செய்திகள்,திரையுலகம் ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், விக்ரம், எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு பாடல்கள் மற்றும் டீசரை வெளியிட்டனர்.

இதன் டீசர் யூடியூப்பில் ஒரே வாரத்தில் இதுவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களை விட அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘மனோகரடு’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீடு விழா அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்கிசான் கலந்துக் கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி