புரோக்கர்களை தேடும் விஜய் பட ஹீரோயின்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை இலியானா, தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போது, மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக விடு வாங்கி குடியேறினார். அதையடுத்து, தமிழ், இந்தியில் நடித்த போதும், ஐதராபாத்தில் தங்கியிருந்து தான், நடித்து வந்தார். ‘பர்பி’ படத்திற்கு பின், இந்தியில் தொடர்ந்து நடித்துவரும் இலியானாவுக்கு, அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.

அதனால், முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்ட இலியானா, ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டை விற்பனை செய்துவிட்டு, மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில், வீடு வாங்கி குடியேறப் போகிறாராம். அதனால், ஆந்திராவில் வீட்டை விற்பதற்கும், மும்பையில் வீடு வாங்குவதற்கும், புரோக்கர்களை தேடி வருகிறார் இலியானா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: