செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…

விளம்பரங்கள்

சென்னை:-ரூ.450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95 சதவீதத்தை முடித்துள்ளது. தற்போது விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கு ஆரத்தில் 5.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மங்கள்யானில் உள்ள லாம் (லிக்கியூட் அபோஜி மோட்டார்) எனும் எந்திரத்தை நான்கு வினாடிகள் நேரத்திற்கு இயங்கவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.இந்த முயற்சியை வெற்றியடையும் பட்சத்தில் வரும் செப்டம்பர் 24ம் தேதி விண்கலத்தின் வேகத்தை குறைத்த பின் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் அதை வெற்றிகரமாக நிலை நிறுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சோதனையில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.இந்த முக்கியமான செயல்பாடுகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: