கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்த நடிகர் அஜீத்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத்.

ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்து பேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: