இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் நான் சுற்றுப்பயணம் செய்யவில்லை – கத்தி தயாரிப்பாளர் மறுப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய்யின் ‘கத்தி’ படத்தை தயாரித்துள்ள சுபாஷ்கரன் அல்லிராஜா, எனக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குமிடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் இலங்கைக்கு சென்றால் ராணுவ ஹெலிகாப்டரில்தான் அங்கு சுற்றுப்யணம் செய்வதாக புகைப்படத்துடன் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதுபற்றி சமீபத்தில் சென்னை வந்த சுபாஷ்கரன் அல்லிராஜா கூறுகையில், நான் ஒருநாளும் இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் சென்றதில்லை. அங்கு செல்லும்போது ஹெலிடூர்ஸ் என்ற நிறுவனத்தின் வாடகை ஹெலிகாப்டரில்தான் சுற்றுப்பயணம் செய்வேன். அதைத்தான் ராணுவ ஹெலிகாப்டர் என்று மாற்றி விட்டார்கள் என்று மறுத்தார்.அதையடுத்து, ராஜபக்சேவின் மகனுடன் நீங்கள் நடைபயணம் செல்வது போன்ற போட்டோக்கள வெளியாகியிருக்கிறதே… என்று கேட்டதற்கு, கிரிக்கெட் வீரர் இயான் போத்தம் தலைமையில் கவாஸ்கர், கங்குலி உள்பட பலரும் கலந்துகொண்ட பீபி சாரிட்டி வாக் -என்ற நடைபயணத்தில் நானும் கலந்து கொண்டேன்.

அதில் ராஜபக்சேவின் மகனும் இருந்திருக்கிறார். அதை வைத்துதான் அவர்களுடன் எனக்கு நெருக்கம் இருப்பதாக செய்தி வெளியிட்டு வருகின்றனர் என்று கூறிய சுபாஷ்கரன் அல்லிராஜா, எனது லைக்கா மொபைல் நிறுவனத்தில் ராஜபக்சேவோ அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களோ யாரும் பங்குதாரர்கள் கிடையாது என்று உறுதிபட சொன்னவர், இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் காரணம், எனது தொழில் எதிரிகள்தான். அவர்கள்தான் எனக்கு எதிராக இந்தமாதிரியான பிரச்சினையை உருவாக்கி விட்டு வருகின்றனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: