செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…

மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…

மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!… post thumbnail image
மும்பை:-ரோஹிட் ஷெட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஷாருக்கான் நடித்து வரும் ஷாருக்கான்ஸ் ஃபேன் படத்தின் பணிகள் முடிந்தது, இந்த புதிய படத்தின் வேலைகளில் இறங்க உள்ளாராம் ரோஹித் ஷெட்டி.

ஷாருக்கானும்-ஐஸ்வர்யா ராயும் இதுவரை, ஜோஷ், மொஹப்பதியன், தேவதாஸ் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால் இந்த ஜோடியை ரொஹித் ஷெட்டி இப்போது தான் முதல் முறையாக இயக்க உள்ளாராம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு மெகா ஸ்டார்களும் மீண்டும் ஜோடி சேர உள்ளது உறுதி ஆகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி