செய்திகள்,திரையுலகம் புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் ஹீரோக்களில், உடலை பிட்டாகவும், சிக்ஸ் பேக் போன்றவற்றுடன் உடம்பை பராமரித்து வருபவர்களில் ஹிருத்திக் ரோஷன் முதன்மையானவர். எப்போதும் தனது உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக்கொள்வார். இந்நிலையில் தன்னை சுற்றி இருப்பவர்களும் உடம்பை பிட்டாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவ்வப்போது ஆலோசனை வழங்குவார், இதை ஏன் எல்லோரும் செய்ய கூடாது என்று எண்ணியவர் இப்போது உடம்பை பிட்டாக வைத்து கொள்வது எப்படி என்று புத்தகம் எழுத உள்ளார்.

அந்தபுத்தகத்தில் உடம்பை பிட்டக்க எந்த மாதிரியாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எந்த மாதிரியான உணவுவகைகளை எடுத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சொல்ல போகிறாராம். தற்போது பேங் பேங் படத்தின் புரொமோஷன் மற்றும் தனது அடுத்தபடமான மொகஞ்சதரோ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பவர், இந்தபடங்களை எல்லாம் முடித்து அடுத்தாண்டு புத்தகம் எழுத எண்ணியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி