செய்திகள்,திரையுலகம் நடன இயக்குனராகவும் மாறிய நடிகை அக்ஷராஹாசன்!…

நடன இயக்குனராகவும் மாறிய நடிகை அக்ஷராஹாசன்!…

நடன இயக்குனராகவும் மாறிய நடிகை அக்ஷராஹாசன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷராஹாசன் ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக் களம் கொண்ட இந்தப் படத்தில் இளையராஜா இசையில் இனிமையான பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. படத்தில் பாடல்களுக்கேற்ப நடனம் அமைப்பதற்கான பொருத்தமான காட்சிகள் இல்லையாம்

. இருந்தாலும் அக்ஷராவின் நடனத் திறமை பற்றி அறிந்த இயக்குனர் பால்கி அவரது நடனத் திறமையை படத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படியாக கொஞ்சம் மாற்றியிருக்கிறாராம். அதோடு, அந்தப் பாடலுக்கான நடனத்தையும் அக்ஷராவையே அமைத்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளாராம். விரைவில் அந்த நடனத்துடன் கூடிய பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.
‘ஷமிதாப்’ வெளிவந்த பிறகு அக்ஷராவின் நடிப்புத் திறமையும் அதிகம் பேசப்படும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி