செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜெயா டி.வி.!…

‘கத்தி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜெயா டி.வி.!…

‘கத்தி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜெயா டி.வி.!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் கத்தி. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படம் ஆரம்பித்த நாட்களில் இருந்து படத்துக்கு எதிராக சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்தது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபக்சே உடன் நெருங்கியவர் என்றும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் ராஜபக்சேவிற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். இருந்தாலும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் வாங்கியுள்ளது. கத்தி படத்தையே வெளியிடக் கூடாது என்று பல அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில், ஜெயா டி.வி. சாட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி