செய்திகள்,திரையுலகம் ‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…

‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…

‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!… post thumbnail image
சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம் ‘ படத்தில் நாயகியாக நடித்த தேஜஸ்வி நடிக்கும் புதிய படத்தில் அவருடைய அம்மாவாக நடிக்க சம்மதித்திருக்கிறாராம் நித்யா மேனன். ஒரு இளம் நாயகிக்கு மற்றொரு இளம் நாயகியே அம்மாவாக நடிக்க சம்மதித்திருப்பது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை, ‘ஓனமலு’ என்ற படத்தை இயக்கிய கிராந்தி மாதவ் இயக்குகிறார்.

‘ஐஸ் க்ரீம்’ படத்தில் தேஜஸ்வி கிளாமராக நடித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகைகளைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை நித்யா மேனன் போன்ற ஒரு சில நடிகைகள் அவ்வப்போது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவருடைய இந்த முடிவுக்கும் பாராட்டு கிடைக்கத்தான் செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி