செய்திகள் அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…

அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…

அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!… post thumbnail image
ரஷ்யாவை சேர்ந்த 6 போர் விமானங்கள் அலாஸ்கா கடற்கரை பகுதியில் அமெரிக்க மற்றும் கனடா போர் விமானங்களை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தது. ஆனால் அமெரிக்க வான்வழியில் நுழைய முடியவில்லை.அந்த விமானங்களில் 2 மிக்31 ரக விமானகங்கள்.இந்த சம்பவம் அசாதாரணமானது அல்ல. ஆண்டுகளுக்கு 10 முறை இவ்வாறு நிகழும்.

வான் பாதுகாப்பு அடையாள மண்டல வான்வெளி கடற்கரையிலிருந்து சுமார் 200 மைல்கள் தூரத்தில் உள்ளது. மற்றும் இது முக்கியமாக சர்வதேச வான்வெளியாகும்.அமெரிக்காவின் வான்வழி நிலத்திலிருந்து 12 கடல்மைல் தொலைவில் உள்ளது. 2 அலாஸ்காவை சார்ந்த எப்.22 போர் விமானங்கள், 2 கன்னடியன் சிஎப்.18 போர்விமானங்களை ரஷ்ய விமானங்கள் புதன்கிழமை மாலை வியாழக்கிழமை காலை இடைமறித்து உள்ளன. இது வெவ்வேறு சம்பவங்கள் ஆகும்.

ரஷ்ய ராணுவ விமானங்கள் இரண்டு புதன் கிழமை அன்று பால்டி கடல் தீவின் தெற்கில் சுவீடன் வான்வெளியில் பறந்ததாக ஸ்வீடன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.இதை தீவிர அத்துமீறல் என சுவீடன் கூறி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய தூதருக்கு நோட்டீசு அனுப்பபடும் என சுவீடன் தெரிவித்து உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி