தாலாட்டு பாடல் பாடி நடித்த நடிகர் அஜீத்!…

விளம்பரங்கள்

சென்னை:-கௌதம் மேனன், இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். ஏற்கனவே ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது படக்குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். இதனை அவரே தெரிவித்து உள்ளார்.

இந்த பாடல்கள் அஜீத்துக்கு மிகவும் பிடித்து போனதாம். ஹாரீஸ் ஜெயராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். மூன்று பாடல்களில் ஒன்று தாலாட்டு பாடலாகும். தாலாட்டு என்று தொடங்கும் இந்த பாடலை அஜீத் தனது மகளாக நடிக்கும் அனிகாவுடன் பாடுவது போல் படமாக்கப்பட்டு வருகிறது.

சிக்கிம், ஜோத்பூர், சண்டிகார், டெல்லி போன்ற இடங்களில் இந்த பாடல் காட்சியை படமாக்குகின்றனர். இந்த மூன்று பாடல்கள் தவிர மேலும் இரண்டு பாடல்களை இந்த படத்துக்காக கம்போஸ் செய்து வருவதாக ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி