கணவருடன் ஜோடி சேருகிறாரா நடிகை நஸ்ரியா!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நடிகை நஸ்ரியா. திடீரென மலையாள நடிகர் ஃபகத் பாசில் காதல் வலையில் விழுந்து கடந்த மாதம் இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.திருமணத்திற்குப் பின் நஸ்ரியா நடிப்பாரா, மாட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவார், அதுவும் அவரது கணவர் ஜோடியாகவே ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று மல்லுவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அன்வர் ரஷித் இயக்கத்தில் உருவாக உள்ள ‘மணியறையிலே ஜின்னு’ என்ற படத்தில்தான் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள் என்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதற்கு ஃபகத் பாசில் எப்போதோ ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்திற்குப் பிறகு இந்த நிஜ ஜோடி மீண்டும் நிழல் ஜோடியாக நடிப்பார்களா என்பதை மலையாள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: