45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ் – ஐ டீஸர் சாதனை!…

விளம்பரங்கள்

சென்னை:-செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவே ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸரைப் பார்க்க ரசிகர்கள் யு டியூப்பை நோக்கி திரண்டனர். ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை 2 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இது தமிழ் சினிமாவில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஞ்சான் சாதனை காலி பண்ணிவிட்டது ஐ டீஸர். இப்போது இன்னொரு சாதனையைச் செய்திருக்கிறது ஐ படத்தின் டீஸர். அதாவது, ஐ படத்தின் டீஸரை 45 மணி நேரத்தில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: